காஞ்சிபுரம்: யார் பிரபந்தம் பாடுவது? - நடு சாலையில் சண்டை போட்டுக்கொண்ட வடகலை, தென்கலை பிரிவினர்!

ஐந்தாம் நாள் விழாவில் தங்க பல்லக்கில் வரதராஜ பெருமாள் வீதியுலாவின் போது தகாத வார்த்தைகளால் பேசிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள்
வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள்புதியதலைமுறை

உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் விழாவில் தங்க பல்லக்கில் வரதராஜ பெருமாள் வீதியுலாவின் போது தகாத வார்த்தைகளால் பேசிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள்
காஞ்சிபுரம்: யார் பிரபந்தம் பாடுவது? வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று வரதராஜ பெருமாள் தங்கப் பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்தில் வீதி உலா வந்து காஞ்சிபுரம் நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள மண்டபங்களில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள அன்னை இந்திராகாந்தி சாலையில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாளுக்கு பின்னால் ஸ்தோத்ர பாடல் பாடி வந்த ததாச்சாரியார்கள் கோஷ்டியில், வடகலை, தென்கலை பிரிவினர்களுக்கும் இடையே நடுச்சாலையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. பொது இடம் என்பதை கூட மறந்து அசிங்கமான தகாத வார்த்தைகளால் இருபிரிவினரும் பேசிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டள்ளனர்.

இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் முகம் சுளித்து இரு பிரிவினரின் செய்கையைப் அருவருப்பாக பார்த்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com