”நான் நீச்சல் கற்றுத்தரேன்” : நீச்சல் பழக குட்டையில் இறங்கிய அக்கா - தம்பிக்கு நேர்ந்த பரிதாபம்!

மணலூர்பேட்டை அருகே அக்காவிற்கு நீச்சல் கற்றுக் கொடுக்க குட்டையில் இறங்கிய அக்கா தம்பி இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Pond
Pondpt desk

செய்தியாளர்: முத்துக்குமரன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜம்பை கிராமத்தில் வசிப்பவர் ஏழுமலை. இவரது குழந்தைகளான சுப்புலட்சுமி (12), கார்த்திக் (11) ஆகிய இருவரும் தங்களது வீட்டின் அருகாமையில் பார்த்திபன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அக்கா சுப்புலட்சுமிக்கு தம்பி கார்த்திக் நீச்சல் கற்றுக் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.

Govt Hospital
Govt Hospitalpt desk
Pond
உடல் பருமனைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர்; சிகிச்சை ஆரம்பித்த சில நிமிடத்தில் பிரிந்த உயிர்!

இதையடுத்து இருவரும் குட்டையில் இறக்கியுள்ளனர். அப்போது இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர். அருகாமையில் இருந்தவர்கள் கூச்சலிட்டதை அடுத்து அங்கு வந்தவர்கள் அக்கா தம்பி இருவரையும் சடலமாக மீட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலூர்பேட்டை போலீசார், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com