பள்ளி மாணவர்கள்pt desk
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி | மாணவர்களுக்கு மாலையிட்டு, மேள தாளங்கள் முழங்க பள்ளிக்கு அழைத்து வந்த ஆசிரியர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே சின்னகொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுக்கு மாலையிட்டு, இனிப்புகள் வழங்கி மேள தாளங்கள் முழங்க ஆசிரியர்கள் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
செய்தியாளர்: பாலாஜி
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள சின்னகொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர், மேலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இதைத் தொடர்ந்து புதிதாக சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்கு மாலையிட்டு, இனிப்புகள் வழங்கி, மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர், இதனால் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.