ஆன்லைன் ட்ரேடிங்கில் ஏற்பட்ட நஷ்டம்.. குடும்பத்துடன் கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் ட்ரேடிங்கில் ஏற்பட்ட நஷ்டத்தால் கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துகொண்டவர்கள்
தற்கொலை செய்துகொண்டவர்கள்pt web

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் ஆன்லைன் டிரேடிங்கில் நஷ்டம் ஏற்பட்டதால் கணவன் மற்றும் கர்ப்பிணி மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த விஜயகுமார் என்பவர், ஆன்லைன் டிரேடிங்கிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் அவருக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜயகுமாரும், அவரது கர்ப்பிணி மனைவியும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்டவர்கள்
‘தற்கொலை தீர்வல்ல மாணவச் செல்வங்களே...’ - நீதிபதி கற்பக விநாயகம் சொன்ன குட்டி கதை!

ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் தொல்லை அதிகரித்து தாங்கள் தற்கொலை செய்வதாக இருவரும் கடிதம் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com