model imagex page
தமிழ்நாடு
மகளிர் உரிமைத் தொகை | நாளை முதல் விண்ணப்பங்கள்.. வீடு வீடாக விநியோகம்!
மகளிர் உரிமைத் தொகை பெற நாளை முதல் விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை பெற நாளை முதல் விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட உள்ளது. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் முதல் முகாமினை ஜூலை 15ஆம் தேதி, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். அதன்படி, தன்னார்வலர்கள் நாளை முதல் வீடு வீடாகச் சென்று, முகாம்கள் நடைபெறும் நாள், இடம், வழங்கப்படும் சேவைகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை விநியோகிக்க உள்ளனர்.
model imagex page
மொத்தம் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடும் இந்த பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறுத்தப்படும் அபாயம்” - எம்.பி கனிமொழி