பொங்கல் பரிசுத்தொகையுடன் முன்கூட்டியே வரவுவைக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை!

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் இன்று முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினையும் முதல்வர் ஸ்டாலின் துவங்கிவைத்துள்ளார்.
பொங்கல் பரிசுத்தொகை
பொங்கல் பரிசுத்தொகைட்விட்டர்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இதன்படி அரசு விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசுத்தொகை
பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

அந்தவகையில் வழக்கமாக 15 ஆம் தேதி வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பண்டிகையையொட்டி இம்மாதம் 10 ஆம் தேதியான இன்றே வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு :

மேலும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் திட்டமும் இன்று தொடங்கப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிறிந்த நிலையில் இத்திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் துவங்கிவைத்துள்ளார்.

பொங்கல் திருநாளையயொட்டி தமிழகத்தில் உள்ள 2,19,57,402 குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக கடந்த சில தினங்களாகவே நியாய விலைக்கடைகள் மூலம் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.

பொங்கல் பரிசுத்தொகை
பந்தலூர் - பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தையை பிடிக்க உதவிய கும்கி யானை!

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 9.30 மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் துவங்கிவைத்தார். இதில் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன், துறைசார் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் ஞாயிற்றுகிழமைகளுக்குள் அனைவருக்கும் பரிசுத்தொகுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com