பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

வேலைநிறுத்தம் தொடர்ந்தாலும், அறிவித்தபடி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர்புதிய தலைமுறை

தமிழ்நாட்டில் 2-வது நாளாக இன்று போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இதுகுறித்து கூறுகையில், “போக்குவரத்து போராட்டத்தினை அறிவித்த தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் வராத இடத்தில் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படும்.

அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர்புதிய தலைமுறை

பொங்கல் பண்டிகைக்கு வழக்கமான அளவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அமைச்சர் சிவசங்கர்
“அதிமுக தொழிற்சங்கங்களோடு சேர்ந்து கொண்டு போராட்டம்” - அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு

பொங்கலுக்கு தங்களின் சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல விரும்புவது வழக்கம். அவர்கள் எந்தவித சிரமமுமின்றி பொங்கலுக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com