அண்ணாமலை
அண்ணாமலைஎக்ஸ் தளம்

டெல்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை.. ஆப்சென்ட் ஆன அண்ணாமலை.. காரணம் என்ன?

தலைநகர் டெல்லியில் இன்று தேசிய தலைவர்களுடன் தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளாதது பேசுபொருளாகியிருக்கிறது.
Published on

அண்மையில் தமிழகம் வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சிக்குள் ஒற்றுமை இல்லாதது, கட்சிப் பணிகளில் தொய்வு இருப்பது, மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்று சேராதது, கூட்டணிக்குப் பின்னும் கட்சியின் செயல்பாடுகள் பெரிதும் பேசப்படாதது உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடும் அப்செட்டுடனேயே டெல்லி புறப்பட்டுச் சென்றதாக சொல்லப்பட்டது.

கோப்புப்படம்
கோப்புப்படம்pt web

இந்நிலையில், அதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காகவும், தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக கூட்டணியுடனான செயல்பாடு, தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமனம், பாஜக மாநாடு குறித்த திட்டமிடல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து டெல்லியில் பாஜக தேசியத் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அண்ணாமலை
"பாஜக எதிரி என்பார்கள்.. அவர்களுக்காகவே களமிறங்கி இருப்பார்கள்" - திருமா குறிப்பிடுவது யாரை?

இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த கூட்டத்தில் பங்கேற்காதது பல்வேறு சந்தேகங்களை கிளப்பிவிட்டிருக்கிறது. அதிமுகவுடன் 2023இல் ஏற்பட்ட கூட்டணி முறிவில் தொடங்கி அண்ணாமலை மீது கட்சியின் தேசிய வட்டாரங்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், தன் பொறுப்பை நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைத்த பின்னரும் கட்சியுடன் ஓரளவு நெருக்கம் காட்டி வந்தார் அண்ணாமலை.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிதான் 2026இல் முதல்வர் என பேசியதில் தொடங்கி, பழனிசாமிக்கு அருகே அவர் இருக்கையில் அமர்ந்தது வரை அடுத்தடுத்த மாற்றங்களால் கட்சியினரே ஆச்சரியப்பட்டுப் போனார்கள் என்பது உண்மையே. ஆனால், அண்ணாமலையால்தான் கடந்த முறை தேர்தலில் ஒரு சீட் கூட பெற முடியவில்லை என அண்மையில் தமிழகம் வந்திருந்தபோது கூட அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டி பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குள் என்ன நடக்கிறது என்ற கேள்விகள் எழ ஆரம்பித்த நிலையில், அது அடுத்தக்கட்டத்தை எட்டி மேலும் பல சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது.

தேசியத் தலைவர் நட்டா, அமித் ஷா ஆகியோருடன் இன்று தமிழக பாஜக தலைவர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், அந்த கூட்டத்திற்கு வராமல் அண்ணாமலை ஆப்செண்ட் ஆகியிருக்கிறார். கட்சி கூட்டம், ஆலோசனைகளில் தவறாமல் பங்கேற்றுவந்த அண்ணாமலை, தலைபோகும் காரியமாக இருந்தாலும் கட்சி கூட்டங்களில் காரியமுடன் பங்கேற்பார். ஆனால் கடந்த முறைதான் என்னவோ நிர்மலா சீதாராமன் தமிழகம் வந்திருந்தபோதுகூட அவர் செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய ஆலோசனையிலும் அவர் பங்கேற்கவில்லை. அதிகமான திருமண நிகழ்வுகள் மற்றும் வேலைகள் இருப்பதால் இன்றைய டெல்லி கூட்டத்திற்கு செல்ல இயலவில்லை என அவர் பதிலளித்திருப்பதுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அண்ணாமலை
"பாஜக எதிரி என்பார்கள்.. அவர்களுக்காகவே களமிறங்கி இருப்பார்கள்" - திருமா குறிப்பிடுவது யாரை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com