"இன்றே தீபத் தூணில் தீபமேற்றலாம்; காவல் ஆணையர் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்" - நீதிபதி உத்தரவு
கார்த்திகை தீபத் திருநாளான நேற்று, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்து முண்ணனி அமைப்பினர் கூட்டமாக திருப்பரங்குன்றத்திற்கு தீபம் ஏற்ற வந்தபோது காவல்துறையினாரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும், 144 தடை உத்தரவையும் காவல்துறை அமல்ப்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்காததை கண்டித்து இந்து முண்ணனி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஏற்ப்பட்ட கலவரத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர் சீனிவாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து, நீதிமன்றத்தில் தீர்ப்பு நடைமுறைப் படுத்தப்படாதது குறித்து மதுரை காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனடியாக காணொளி வழியாக ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மதுரை காவல் ஆணையர் லோகநாதன் மட்டும் காணொளி வாயலாக ஆஜராகி விளக்கமளித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் ஆஜராகவில்லை
இதையடுத்து, அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு என இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்றே, திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார். மேலும், 144 தடை உத்தரவையும் ரத்து செய்த அவர், மனுதாரர் தீபம் ஏற்ற உரிய பாதுகாப்பை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வழங்கவும் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சிமீதுள்ள தீபத் தூணியில் தீபமேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

