நீதிபதி வீட்டில் பணியிலிருந்த காவலர் தற்கொலை முயற்சி

நீதிபதி வீட்டில் பணியிலிருந்த காவலர் தற்கொலை முயற்சி
நீதிபதி வீட்டில் பணியிலிருந்த காவலர் தற்கொலை முயற்சி

சென்னையில் நீதிபதியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 

சென்னை, அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதி முரளிதரன் வீட்டில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையை சேர்ந்த 29 வயதாகும் சரவணன் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த அபிராமபுரம் காவல்துறையினர், சரவணனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்கொலைக்கு முயற்சிப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். அதில் தன்னுடையை தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்றும், தன்னுடைய பெற்றோரை நன்றாக பார்த்துக்கொள்ளும்படியும் எழுதியுள்ளார். மேலும், தான் இறந்த பிறகு தனக்கு கிடைக்கும் பணத்தை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தன்னுடைய காக்கி உடையை கழற்றக்கூடாது என்பதே கடைசி ஆசை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com