ஜெ.என்.என் இன்ஸ்டிட்யூட்.. திறக்கப்பட்ட புதிய வளாகங்கள்!
ஜெ.என்.என் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினீயரிங்கில் இரண்டு முக்கியமான வளாகங்கள், J.N.N Intel® Unnati டேட்டா-சென்ட்ரிக் லேப்ஸ் மற்றும் J.N.N ஹட் கஃபே விமர்சையாக திறக்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வில் ஆர்.கே.இராமச்சந்திரன், அசோசியேட் டைரக்டர், ஹ்யூமன் ரிசோர்ஸஸ், டிலாய்ட் ஷேர்ட் சர்வீசஸ் இந்தியா எல்.எல்.பி., டேட்டா-சென்ட்ரிக் லேப்ஸ்-ஐ திறந்து வைத்தார் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து, பிரகாஷ் ரங்கநாதன், வைஸ் பிரெசிடண்ட் மற்றும் சீஃப் ஹ்யூமன் ரிசோர்ஸ்ஸ் ஆஃபிசர், நொவக் டெக்னாலஜி, J.N.N ஹட் கஃபே-ஐ திறந்து வைத்தார். பிரமுகர்களின் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வுடன் விழா தொடக்கம் கண்டது. டாக்டர் கே.கணேசன், முதல்வர், ஜெ.என்.என் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினீயரிங், வரவேற்புரை ஆற்றினார் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சி பாதையை விளக்கினார்.
முக்கிய உரையை நவீன் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர், ஜெ.என்.என் கல்வி நிறுவனங்கள் வழங்கினார். அவர் மாணவர்களின் எதிர்கால மேம்பாட்டிற்கு தொழில் மற்றும் கல்வி இணைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார். எஸ்.ஜெயச்சந்திரன், தலைவர், ஜெ.என்.என் கல்வி நிறுவனங்கள், அதிபர் உரையில் மாணவர்களுக்கு உலகத் தரமான கல்வி மற்றும் முழுமையான வளர்ச்சியை வழங்கும் தனது பார்வையை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் நன்றி உரையினை முனைவர் J.N.சுவாமிநாதன் வழங்கினார். இந்நிகழ்வு ஜெ.என்.என் நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய அத்தியாயத்தினைத் திறந்தது.