சென்னை JNN கல்லூரியில் டெக் எக்ஸலன்ஸ் 300 உயர்நிலை கணினி ஆய்வுக் கூடம் தொடக்கம்!

சென்னை ஜெ.என்.என். பொறியியல் கல்லூரியில் (தன்னாட்சி) டெக் எக்ஸலன்ஸ் 300 உயர்நிலை கணினி ஆய்வுக் கூடம் தொடக்கம்
டெக் எக்ஸலன்ஸ் 300 உயர்நிலை கணினி ஆய்வுக் கூடம்
டெக் எக்ஸலன்ஸ் 300 உயர்நிலை கணினி ஆய்வுக் கூடம்புதிய தலைமுறை

சென்னை ஜெ.என்.என். கல்லூரியில் கணினி பொறியியல் துறையின் டெக் எக்ஸலன்ஸ் 300 உயர்நிலை கணினி ஆய்வுக் கூடத்தினை திரு. கிருஷ்ண பாலகுருநாதன் Chief Mentor I, Head Campus to corporate, I L& D, Hexaware Technologies துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “இந்த மையம் தொழில்நுட்பத் திறன்களை வளர்ப்பதற்கு மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பை வழங்குவதுடன் தொழில்நுட்ப உலகில் அவர்களது பங்களிப்புகளை மேம்படுத்துவதற்கும் துணைபுரியும். இதை பயன்படுத்தி மாணவர்கள் மேன்மேலும் கணினி அறிவியல் இலக்குகளை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும்” என ஊக்கப்படுத்தினார்.

மேலும் கணினி அறிவியல் துறையில் சிறந்து விளங்குவதற்கு இந்த ஆய்வகம் குறிப்பிடத்தக்க படியாகும் என்பதை அவர் எடுத்துரைத்தார். “கணினி அறிவியல் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறன் கொண்ட இந்த கணினி அறிவியல் ஆய்வுக்கூடம், மாணவர்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது.

இந்த கணினி அறிவியல் துறையில் பிரகாசமான தீவிர ஆலோசனைகள் நுண்ணறிவுகள் மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான ஒரு தளமாக இது அமையும்.

அனைத்து துறைகளிலும் மாணவர்களுக்கு மேம்பட்ட உட்கட்டமைப்பை வழங்குவதில் உலகளாவிய சிறப்பை உறுதி செய்வதில் ஜெ.என்.என். பொறியியல் கல்லூரியால் செய்யப்பட்ட இம்முயற்சி பாராட்டுக்குரியது” என்றார்.

இந்த நிகழ்வின்போது இக்கல்விக் குழுமத்தின் தலைவர் திரு எஸ் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் திரு நவீன் ஜெயச்சந்திரன், பொறியியல் கல்லூயின் முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com