Pandeeswaran
Pandeeswaranpt desk

“களம் காணும் வீரர்கள் போதைப் பொருள் புழங்காமல் இருக்கணும்” - மூன்றாமிடம் பிடித்த பாண்டீஸ்வரன்

“களத்துல இறங்கி யாரும் சண்டை போட்டுக்கக் கூடாது. எல்லோரும் ஒன்றுமையா இருந்து மாடு பிடிக்கணும்” - பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மூன்றாமிடம் பிடித்த வீரர் பாண்டீஸ்வரன்.
Published on

நீயா நானா என முட்டிமோதிய காளைகளும், காளையரும் களம் கண்ட பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடத்தையும், 10 காளைகளை பிடித்த தமிழரசன் இரண்டாமிடத்தையும், 8 காளைகளை அடக்கிய பாண்டீஸ்வரன் மூன்றாமிடமும் பெற்றனர்.

Jallikattu
Jallikattufile

மூன்றாமிடம் பெற்ற பாண்டீஸ்வரன் நமது செய்தியாளருக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்... “இந்த போட்டியில் மூன்றாமிடம் பிடித்தது மிகவும் சந்தோஷமான விஷயம். டிகிரி முடித்துள்ள நான் கடந்த ஆறு வருடங்களாக பயிற்சி எடுத்து வருகிறேன்.

Pandeeswaran
பாலமேடு ஜல்லிக்கட்டு: வீரர்கள் கையில் சிக்காமல் சீறி பாய்ந்து பரிசை வென்ற காளை!

இதுவரை 50, 60 வாடிவாசலில் களம் இறங்கியிருக்கேன். அவற்றில் தங்கக்காசு, வெள்ளிகாசு, அண்டா, டைனிங் டேபிள், கட்டில் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை பரிசாக பெற்றிருக்கிறேன்.

களத்தில் இறங்கி வீரர்கள் யாரும் சண்டை போட்டுக்கக் கூடாது. எல்லோரும் ஒன்றுமையாக இருந்து மாடு பிடிக்கணும். போதைப் பொருள் புழங்காமல் இருக்க வேண்டும்” என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com