தமிழ்நாடு
ஸ்டாலினுக்கு ராக்கி கயிறு கட்டிய ஜெயின் பெண்கள்
ஸ்டாலினுக்கு ராக்கி கயிறு கட்டிய ஜெயின் பெண்கள்
சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு ஜெயின் சமூக பெண்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவரது கையில் ராக்கி கயிறைக் கட்டினர். இனிப்புகளையும் அவர்கள் வழங்கினர். அப்போது, ஸ்டாலினும், ஜெயின் சமூகத்துப் பெண்களுக்கு ரக்சா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார்.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், “சகோதரத்துவத்தின் அடையாளமாக கொண்டாடப்படும் ரக்சா பந்தன் விழாவினை முன்னிட்டு ஜெயின் சகோதரிகள் என்னை சந்தித்து வாழ்த்தினார்கள். நானும் அவர்களுக்கு இனிய ரக்சா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

