தமிழிசை சௌந்தரராஜன்pt web
தமிழ்நாடு
“இது மனக்கவலை அளிக்கக்கூடிய ஒன்று” - பாஜக வேட்பாளர் தமிழிசை பேட்டி
“ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்” என தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒட்டுமொத்தமாக வாக்குசதவீதம் குறைவது என்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றுதான்.
#TamilisaiSoundararajan | #ElectionCommission
இதில் ஆளும் கட்சிக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதெல்லாம் ஒன்றும் இல்லை. ஒருவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றவில்லை என்றாலும் அது நம் அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்.
வாக்குசதவீதம் அதிகரித்து இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் மிக நம்பிக்கையோடு இருக்கிறேன். நிச்சயமாக எங்களுக்கான வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
ஆனால் ஒட்டுமொத்தமாக வாக்குகள் குறைந்துள்ளது என்பது மனக்கவலை அளிக்கக்கூடிய ஒன்றுதான்” என தெரிவித்துள்ளார்.