“ஜெயலலிதாவின் கார் குறித்து புகார் அளிக்க உள்ளோம்”- மரியாதை செலுத்திய ஜெ.தீபா பேட்டி

“ஜெயலலிதாவின் கார் குறித்து புகார் அளிக்க உள்ளோம்”- மரியாதை செலுத்திய ஜெ.தீபா பேட்டி
“ஜெயலலிதாவின் கார் குறித்து புகார் அளிக்க உள்ளோம்”- மரியாதை செலுத்திய ஜெ.தீபா பேட்டி

ஜெயலலிதா பிறந்தநாளான இன்று போயஸ் கார்டனில் மரியாதை செலுத்திய ஜெ. தீபா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

"போயஸ்கார்டன் எங்களிடம் வந்த பிறகு அவர் வாழ்ந்த இடத்தில் மரியாதை செலுத்தி இருக்கிறோம். உள்ளே பராமரிப்பு பணிகள் நடக்கிறது. முழுமையாக முடிந்த பிறகு இங்கே குடியேறி வருவோம். போயஸ் கார்டனில் இருக்கும் பொருட்கள் எங்கள் கண்காணிப்பில் இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா பயன்படுத்திய கார் எங்கு இருக்கிறது எனத் தெரியவில்லை. கார் குறித்து புகார் அளிக்க இருக்கிறோம். மேலும், கோடநாடு இடம் குறித்த தகவல் இன்னும் எங்களுக்கு தெரியவில்லை. இதுவரை சசிகலாவிடம் எதுவும் பேசவில்லை." என்றார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அவருடைய திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு அரசு உயர் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com