2 குழந்தைகளுடன் இந்தியாவை சுற்றும் இத்தாலி தம்பதி!

கை நிறைய சம்பாதித்தாலும் விமானம் மூலமாக சுற்றுலா செல்லாமல், சைக்கிளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் இத்தாலி தம்பதி.. காரணம் என்ன? பார்க்கலாம்.
இந்தியாவில் இத்தாலி தம்பதி
இந்தியாவில் இத்தாலி தம்பதிபுதியதலைமுறை

இத்தாலி நாட்டைச் சேர்ந்த தம்பதியான செலஞ்சீவ் - பெடரிகா பிரைட்டுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். செலஞ்சீவ் இத்தாலியில் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் நிலையில், அவர் பணிபுரியும் நிறுவனத்தில் இரண்டு மாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் விடுமுறையை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் இத்தாலியில் இருந்து கேரளா வந்துள்ளார் அவர். அப்போது கேரளா முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் அவர்களுக்கு புதிய அனுபவம் கிடைத்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டிற்குள் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்த தம்பதி, தற்போது மாமல்லபுரத்திற்கு வருகை தந்தனர். அங்குள்ள சுற்றுலா தளங்களை பார்வையிட்ட பிறகு, திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் கோவிலை பார்வையிட்டு பிறகு காஞ்சிபுரம் கோவில்களுக்கு செல்வதாக கூறுகின்றனர். இந்த பயணத்தில் இருவரும் தங்களின் இரு குழந்தைகளை தங்களின் சைக்கிளோடு சேர்த்து கட்டிக்கொண்டு பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சைக்கிள் மூலமாகவே குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நல்ல நினைவுகளை சேகரிக்க உள்ளதாக தெரிவித்தனர். இங்கு விடுமுறை தினங்களை கழிக்க போவதாக கூறும் அவர்கள், கை நிறைய சம்பாதித்தாலும், விமானம் மூலமாக சுற்றுலா செல்லாமல், இயற்கையை ரசிக்க சைக்கிளில் பயணம் மேற்கொள்வதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com