செப் 22க்கு பின் கட்சியை தொடங்குகிறாரா விஜய்? - பின்னணி காரணம் இதுதான்!

சட்டமன்ற தேர்தலுக்கே விஜய் முக்கியத்துவம் கொடுப்பார் என்று கூறப்பட்ட நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முன்னெடுப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
vijay
vijaypt web

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மத்திய அரசு செப்.18 ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை இந்த சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. சிறப்புக்கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஓரிரு தினங்கள் முன் சிறப்புக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டது. அதில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணத்தை குறித்து தங்களது அனுபவங்களைப் பகிரவும் விவாதங்களை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விஜய், புஸ்ஸி ஆனந்த்
விஜய், புஸ்ஸி ஆனந்த்புதிய தலைமுறை

அதேபோல் ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற மசோதாக்களும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்புக் கூட்டத்தொடரை முன்னிட்டு செப் 17 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் ஒவ்வொரு அணியையும் சந்தித்து ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது. அண்மையில் மகளிர் அணியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் விஜய் பங்குகொள்ளவில்லை என்றாலும் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு அடுத்தடுத்த செயல்பாடுகளைக் குறித்து விளக்கினார்.

விஜய்
விஜய்புதிய தலைமுறை

சட்டமன்ற தேர்தலுக்கே விஜய் முக்கியத்துவம் கொடுப்பார் என்று கூறப்பட்ட நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முன்னெடுப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக விஜய் தனது கட்சியை விரைவில் பதிவு செய்யும் முனைப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் முடிந்த பின் நடிகர் விஜய் கட்சி தொடங்குவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுத்திருந்த விஜய் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் அதில் (சட்டமன்ற) போட்டியிடுவதில் உறுதி என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com