\
International Day of the Girl Child: CM Vijay Extends Wishes
கோப்புபடம்Pt web

”பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள்!” - முதல்வர் விஜய் வாழ்த்து!!

சர்வதேச பெண்குழந்தைகள் தினத்தை ஒட்டி முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Published on: 

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், வாழ்த்து தெரிவித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், பெண் குழந்தைகளைக் கொண்டாடி, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தால் (UNICEF) சர்வதேச பெண் குழந்தை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், பெண் குழந்தைகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள்! அவர்களின் மழலைச் சிரிப்பு, குடும்பத்தின் மகிழ்ச்சி! அவர்களின் துள்ளல், இயற்கையின் பேரழகு! ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது, அங்கே அன்பும், கருணையும், அளவிட முடியாத ஆளுமையும் சேர்ந்தே பிறக்கின்றன. பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வு, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமை, முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வது நமது கடமையும், பொறுப்புமாகும். பெண் குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, முன்னேற்றத்திற்குத் துணை நின்று, பாகுபாடற்ற சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

International Day of the Girl Child: CM Vijay Extends Wishes
நேற்று ராகுல்.. இன்று மோடி.. முதல்வர் விஜயின் அடுத்தடுத்த சந்திப்புகள்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com