சாக்லேட்டில் புழு
சாக்லேட்டில் புழுpt web

மயிலாடுதுறை | எந்த சாக்லேட்டை பிரித்தாலும் உயிருடன் பூச்சி.. அலட்சிய பதில்.. பாய்ந்த நடவடிக்கை!

மயிலாடுதுறையில் காலாவதியாகாத சாக்லேட்டில் உயிருடன் பூச்சி நெளிந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி. கடை நிர்வாகத்தின் அலட்சிய பதிலால் உணவு பாதுகாப்பு துறையில் புகார். ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி
Published on

திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் ஆர்த்தி தம்பதியினர். இவர்கள் கடந்த 5-ஆம் தேதி மயிலாடுதுறைக்கு வந்தபோது பட்டமங்கல தெருவில் உள்ள பிரபல தனியார் வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்கியுள்ளனர். அதில் சாக்லேட் பாக்ஸ் (டியூக்ஸ் டிரஃபல்) இரண்டு வாங்கி உள்ளனர்.

ஒரு பாக்ஸில் 25 சாக்லேட் இருந்துள்ளது. பின்னர், ஆடுதுறைக்கு தன் தாய் வீட்டிற்கு சென்ற ஆர்த்தி ஒரு சாக்லேட் பாக்ஸை அங்கிருந்த குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். ஒரு பாக்ஸை தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு கொடுக்க வைத்துக் கொண்டு தம்பதியினர் ஊர் திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் இன்று ஆர்த்திக்கு போன் செய்த அவரது தாயார் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுக்க வேண்டாம் என்றும் அதில் பூச்சி உயிருடன் நெளிவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் தங்களிடமிருந்த சாக்லேட் பாக்ஸை பிரித்து பார்த்தபோது சாக்லேட்டில் உயிருடன் பூச்சி ஊர்ந்து சென்றுள்ளது. அந்த சாக்லேட் பாக்ஸில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தயாரிக்கப்பட்ட சாக்லெட் என்றும் 12.06.2025 காலாவதியாகும் தேதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காலாவதியாகாத சாக்லெட்டில் பூச்சி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்ததுள்ளனர்.

சாக்லேட்டில் புழு
“இந்தி தேசிய மொழி அல்ல; நான் ஏன் இந்திய அணியின் கேப்டனாகவில்லை” - மாணவர்களிடம் அஸ்வின் பேச்சு!

உடனடியாக தம்பதிகள் இருவரும் சாக்லேட் வாங்கிய மயிலாடுதுறை ஷாப்பிங் மாலுக்கு வந்துள்ளனர். அந்த நிறுவனத்திடம் புகார் தெரிவித்து சாக்லேட்டை விற்பனைக்கு வைக்காதீர்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் நிர்வாகத்தினர் மேலே இருந்து பூச்சி விழுந்திருக்கலாம் என்று அலட்சியமாக கூறியதாக மணிகண்டன் ஆர்த்தி தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.

பின்னர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். நிறுவனத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் பாதிக்கப்பட்டவர்களிடம் புகாரை பெற்றுக் கொண்டார். விற்பனைக்கு உள்ள இந்த சாக்லெட்டில் எந்த சாக்லெட்டை எடுத்து பிரித்தாலும் அதில் இருந்து பூச்சி உள்ளதாக குற்றம்சாட்டி பிரித்து பூச்சியை காண்பித்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள சாக்லேட் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாகவும் சாக்லேட்டை கோயமுத்தூரில் உள்ள உணவு பகுப்பாய்வு மையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைப்பதாகவும் முடிவுகளின் அடிப்படையில் சாக்லேட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாக்லேட்டில் புழு
2030-ம் ஆண்டுக்குள் எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும்? குறையும்?.. தரவுகள் சொல்வதென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com