இந்தியாவின் டாப் 10 மெட்ரோ ரயில் நகரங்கள்.. சென்னைக்கு என்ன இடம்?
டெல்லியை உள்ளடக்கிய தலைநகர பிராந்தியத்தில் 416 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன. இதுவே நாட்டில் மிகப் பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பாகும். மும்பை பெருநகர பிராந்தியத்தில் 101.4 கிலோ மீட்டர் தொலைவுக்கும் பெங்களூருவில் 96.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும் மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன. இந்தியாவிலேயே மிகப் பழைய மெட்ரோ ரயில் சேவை கொண்ட கொல்கத்தாவில் 73.4 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது. ஹைதராபாதில் 69 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ சேவை கிடைக்கிறது.
சென்னையில் வடபழனி - பூவிருந்தவல்லி பாதை திறப்புக்கு பின் அதன் மெட்ரோ சேவையின் தொலைவு 68 கிலோ மீட்டராக உயர்வதுடன் நாட்டிலேயே அதிக தொலைவுக்கு மெட்ரோ சேவை வழங்கும் நகரங்களில் ஆறாவது இடத்துக்கும் உயர்கிறது. 7ஆவது இடத்துக்குப் பின்தங்கிய அகமதாபாத் - காந்திநகரில் 68.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ சேவை வழங்கப்பட்டு வருகிறது. நாக்பூரில் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது. புனேவில் 33.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும் கொச்சியில் 28.5 கிலோ மீட்டர் தொலைவுக்கும் மெட்ரோ சேவைகள் வழங்கப்படுகின்றன.

