மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனலில் உள்ள ஜெயலிலதாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 3 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் குழு இந்த சோதனை நடத்தி வருகின்றனர். போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறையில் வருமான வரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். போயஸ் இல்லத்தின் முதல் தளத்தில் பூங்குன்றன் அறை உள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்றே சோதனை நடத்தப்பட்டு வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். சோதனை நடைபெறுவதையொட்டி போயஸ் கார்டன் வீட்டிற்கு வெளியே தமிழக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாதுகாப்பிற்காக மட்டுமே தாங்கள் நிற்பதாகவும், மற்றபடி சோதனைக்கும் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.