தொழிலதிபர் அபிராமி ராமநாதனிடம் விசாரணை; வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற வருமான வரித்துறை

தொழிலதிபர் அபிராமி ராமநாதனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயப்பேட்டை, சென்னை
ராயப்பேட்டை, சென்னைpt web

தொழிலதிபர் அபிராமி ராமநாதனை, ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து போயஸ்கார்டனில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்கள், அப்பாசாமி கட்டுமான நிறுவனங்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனை இரண்டாம் நாளான இன்றும் தொடர்கிறது. நேற்று மாலை அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.

இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்ற நிலையில் கணக்கில் காட்டப்படாத பணம், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் போயஸ் கார்டனில் உள்ள அவரது அலுவலகத்திலும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க அபிராமி ராமநாதனை அவரது இல்லத்தில் இருந்து அலுவலகம் உள்ள போயஸ் கார்டனிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com