மது போதையிலிருந்த கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்... - என்ன நடந்தது?

மங்களூரில் மது போதையில் மனைவியின் கன்னத்தைக் கடித்துக் காயப்படுத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.
சுரேஷ் கவுடா  மற்றும்  அவருடைய மனைவி மோகினி
சுரேஷ் கவுடா மற்றும் அவருடைய மனைவி மோகினி pt wep

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா அருகே உள்ள பெல்தங்கடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் கவுடா [55]. இவரது மனைவி மோகினி [54]. இந்த தம்பதிக்கு 22 வயதில் மகள் உள்ளார். சுரேஷ் கவுடா கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல், தினமும் குடித்துவிட்டு வந்து, மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சுரேஷ் கவுடா
சுரேஷ் கவுடா

இந்தநிலையில் சம்பவத்தன்று, மது போதையில் வீட்டிற்குச் சென்ற அவர் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த சுரேஷ் கவுடா திடீரென மனைவியின் இடது கன்னத்தைப் பிடித்துக் கடித்துள்ளார். வலி தாங்க முடியாமல் சுரேஷ் கவுடா மனைவியின் அலறியுள்ளார். சத்தம் கேட்டு இவர்களின் மகள் ஓடி வந்து தாயைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அவரையும் சுரேஷ் கவுடா, தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சுரேஷ் கவுடா  மற்றும்  அவருடைய மனைவி மோகினி
விழுப்புரம்: கதவை திறந்துபார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. இறப்பிலும் பிரியாத தாய்- மகன் பாசம்

இதில் படுகாயமடைந்த சுரேஷ் கவுடாவின் மனைவி மோகினியும், அவரது மகளும் உஜ்ரேவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

சுரேஷ் கவுடா மனைவி மோகினி
சுரேஷ் கவுடா மனைவி மோகினி

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய சுரேஷ் கவுடாவை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சுரேஷ் கவுடா  மற்றும்  அவருடைய மனைவி மோகினி
ஜகதீப் தன்கர் போல மிமிக்கிரி - “மனம் நொந்து போனேன்” குடியரசுத் தலைவர் வேதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com