விழுப்புரம்: கதவை திறந்துபார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. இறப்பிலும் பிரியாத தாய்- மகன் பாசம்

மகன் இறந்த அதே நாளில் உயிரைவிட்ட தாய்.. சென்னையில் இருந்து அவலூர்பேட்டைக்கு மகன் உயிரிழந்த செய்தியை சொல்லாமல் உடலை எடுத்துச்சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது.. முழு விவரத்தை பார்க்கலாம்
உயிரிழந்த தாய் - மகன்
உயிரிழந்த தாய் - மகன்புதியதலைமுறை

செய்தியாளர் - தமிழரசன்

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் 80 வயது நிரம்பிய பச்சையம்மாள். 60 வயது நிரமிய இவரது மகன் ஜெயராமன் தனது குடும்பத்துடன் சென்னையில் தனியாக வசித்துவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மாரடைப்பால் காலமானார்.

இந்த நிலையில் ஜெயராமனின் மனைவி மற்றும் உறவினர்கள் அவரது சொந்த ஊரான அவலூர்பேட்டைக்கு கொண்டு சென்று உடலை அடக்க செய்ய திட்டமிட்டுள்ளனர். அங்கு கிராமத்தில் தனியாக வசித்து வரும் தாயிடம், மகன் இறந்ததை கூறினால் வேதனையை தாங்கமாட்டார் என்று அவரிடம் கூறாமலேயே ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.

உயிரிழந்த தாய் - மகன்
"115 செ.மீ மழை பெய்தால் எந்த முயற்சி எடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது” - தலைமைச் செயலாளர் பேட்டி

வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, உள்பக்கமாக தாழிடப்பட்ட கதவு நீண்ட நேரமாக திறக்காததால், ஒரு கட்டத்தில் திறந்து பார்த்தபோது ஜெயராமனின் தாய் பச்சையம்மாளும் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இருவரது உடலையும் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் ஜெயராமன் குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் இருவரது புகைப்படமும் ஒரே பேனரில் வைத்து அவலூர்பேட்டை நகரப் பகுதியில் வைத்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com