கணக்கில் அடக்க முடியாதளவு அதிகரித்த கள்ளச்சாராய வழக்குகள்... அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்!

கடந்த நான்கு ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயம், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.
கள்ளச்சாராயம் மரணம்
கள்ளச்சாராயம் மரணம்pt

செய்தியாளர் - ஆனந்தன்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 57க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள கள்ளச்சாராயம் எவ்வளவு, கைது செய்யப்பட்டுள்ள சாராய விற்பனையாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்ற அதிர்ச்சிகரமான புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.

கள்ளச்சாராயம் மரணம்
அந்த எமோசன்.. அந்த வெறி! 2023 ODI WC-ல் ஏற்பட்ட வலி! 2024-ல் ஆஸியை பழிதீர்த்து ஆப்கானிஸ்தான் வரலாறு!

2021

கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை கள்ளச்சாராயம் தொடர்பாக 96,916 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96,737 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 6,08,793 லிட்டர் சாராய ஊறல்களும், 181597 லிட்டர்கள் கள்ளச்சாராயமும், 2,48,991 லிட்டர் பாண்டிச்சேரி கள்ளச்சாராயமும், 314 லிட்டர் ஆந்தரப்பிரதேச கள்ளச்சாராயமும், 60,705 லிட்டர்கள் எரிசாராயமும், 2,28,305 லிட்டர் மதுபாட்டில்களும், 21,130 லிட்டர் கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

சாராயத்தை கடத்த உதவியதாக 3,733 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்களில் 149 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கள்ளச்சாராயம் மரணம்
‘இதுக்கு ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து கிட்ட தோத்தே போயிருக்கலாம்’! WI-க்கு மரண அடி கொடுத்து வென்ற ENG!

2022

2022-ம் ஆண்டு சாராயம் விற்பனை தொடர்பாக 14,0649 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விற்பனையில் ஈடுபட்டதாக 13,9697 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஊறல் 8,89,995 லிட்டர்களும், கள்ளச்சாராயம் 1,60,034 லிட்டர்களும், பாண்டி சாராயம் 3,56,570 லிட்டர்களும், ஆந்திரா சாராயம் 1,415 லிட்டர்களும், எரிசாராயம் 37,217 லிட்டர்களும், மதுபான பாட்டில் 3,02,029 லிட்டர்களும், கள்ளு 30,263 லிட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கள்ளச்சாராயம் மரணம்
கள்ளச்சாராயம் மரணம்

இவர்களிடமிருந்து 3,457 வாகனங்களும், கைது செய்யப்பட்ட 162 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் மரணம்
இப்படி ஒரு விதியா? ’ஹிட் விக்கெட் + ரன்அவுட்’ 2 முறை அவுட்டாகியும் NOTOUT கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன்!

2023

2023-ம் ஆண்டில் 1,51,654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,50,970 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஊறல்கள் 9,59,770 லிட்டர்களும், கள்ளச்சாராயம் 18,7665 லிட்டர்களும், பாண்டி சாராயம் 3,66,475 லிட்டர்களும், ஆந்திரா சாராயம் 478 லிட்டர்களும், எரிசாராயம் 38,622 லிட்டர்களும், மதுபான பாட்டில் 2,93,951 லிட்டர்களும், கள்ளு 41,975 லிட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கள்ளச்சாராயம் மரணம்
கள்ளச்சாராயம் மரணம்

இவர்களிடமிருந்து 3,308 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 159 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கள்ளச்சாராயம் மரணம்
‘உறவெல்லாம் ஒன்றாக..விழியெல்லாம் தேனாக’ விஜய்-பவதாரணி குரலில் மனதை வருடும் சின்ன சின்ன கண்கள் பாடல்!

2024

2024ஆம் ஆண்டு மே மாதம் வரை 74,491 வழக்குபதிவு செய்யப்பட்டு 73,680 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊறல் 4,21,047 லிட்டரும், கள்ளச்சாராயம் 44,663 லிட்டரும், பாண்டி சாராயம் 1,03,227 லிட்டரும், ஆந்திரா சரக்கு 204 லிட்டரும், எரிசாராயம் 5,475லிட்டரும், மதுபாட்டில் 1,52,819 லிட்டரும், கள்ளு 36,274 லிட்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 1,482 வாகனங்களும் 95 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொடர்பான வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிகரிப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.

கள்ளச்சாராயம் மரணம்
0 தோல்வி.. வரிசையாக 6 வெற்றி! இருப்பினும் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் SA! வில்லனாக மாறிய WI!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com