‘உறவெல்லாம் ஒன்றாக..விழியெல்லாம் தேனாக’ விஜய்-பவதாரணி குரலில் மனதை வருடும் சின்ன சின்ன கண்கள் பாடல்!

யுவன்சங்கர் ராஜா இசையில் சின்ன சின்ன கண்கள் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள கோட் படத்தின் பாடல் எங்களுடைய இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
தி கோட் பட பாடல்
தி கோட் பட பாடல்PT

இயக்குநர் வெங்கட் பிரவு இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மங்காத்தா வெளியாகி சக்கப்போடு போட்ட போது, இயக்குநருக்கு போன் செய்த நடிகர் விஜய் “நீங்க சொல்லிருந்தா அர்ஜூன் சார் கேரக்டர்ல நானே நடிச்சிருப்பன்”னு சொன்னதா வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் பகிர்ந்திருப்பார். அதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் அதற்குபிறகு வெங்கட்பிரவு-விஜய் கூட்டணியில் ஒரு படம் வெளியாகாதா என ஏங்கிய சம்பவங்கள் இருக்கின்றன.

அந்த ஏக்கத்திற்கெல்லாம் தீணிபோடும் வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (G.O.A.T) படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் மட்டுமில்லாது நடிகர் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட திரைப்பட்டாளமே சேர்ந்து நடித்து வருகிறது.

G.O.A.T திரைப்படம்
G.O.A.T திரைப்படம்PT

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

தி கோட் பட பாடல்
இப்படி ஒரு விதியா? ’ஹிட் விக்கெட் + ரன்அவுட்’ 2 முறை அவுட்டாகியும் NOTOUT கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன்!

ரசிகர்கள், வெங்கட்பிரபுக்கு மட்டுமில்ல விஜய்க்கும் எமோசலான படம்!

விஜய் அரசியலுக்கு செல்கிறார், இதுதான் அவருக்கு கடைசி திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் ஒரு பக்கமும், நடிகர் விஜய் உடன் முதல் படம், விஜய்-யுவன் காம்போவில் இரண்டாவது படம் மற்றும் தங்களுடைய மறைந்த சகோதரியின் குரலில் ஒரு பாட்டு என வெங்கட்பிரபு குடும்பம் மறு பக்கம் என இங்கு படத்தின் எமோசனுக்கு குறைவில்லாத அனைத்து பக்கங்களும் நிறைந்துள்ளன.

vijay
vijay

ஆனால் இதையெல்லாம் தான்டி, தன் ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து படம் பண்ணக்கூடிய விஜய்க்கும் ஒரு எமோசலான படமாகவே மாறியுள்ளது. தன்னுடைய மாஸ் டயலாக், ஆக்சன் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் இருப்பது போல் என்னுடைய காதல் மற்றும் குடும்ப ஸ்கிரிப்ட் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் ஒரு படம் பண்ணவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக எப்போதும் விஜய் ரசிகர்களுடன் இணைந்து இருந்துள்ளார்.

G.O.A.T Movie
G.O.A.T Movie

அதைவெளிப்படுத்தும் விதமாக தன்னுடைய அனைத்து ரசிகர்களின் எமோசனலையும் பூர்த்தி செய்யும் விதமாகவே கோட் திரைப்படத்தை விஜய் அனுகியிருக்கிறார் என்பது சாட்சியாக “சின்ன சின்ன கண்கள்” பாடல் பிரதிபலிக்கிறது.

தி கோட் பட பாடல்
”அக்காவின் குரலை இப்படி பயன்படுத்துவோம் என கற்பனை கூட செய்ததில்லை”- GOAT பாடல் பற்றி யுவன் உருக்கம்!

இதயத்தை வருடும் விஜய்-பவதாரணி குரல்!

கோட் திரைப்படத்தின் இரண்டாவது பாடலாக “சின்ன சின்ன கண்கள்” பாடல் வெளியாகியுள்ளது, அதில் மறைந்த பாடகி பவதாரணியின் குரல் ஏஐ டெக்னாலஜி மூலம் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. பவதாரணி மற்றும் விஜய் இரண்டு குரல்களும் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளன.

G.O.A.T Movie
G.O.A.T Movie

கண்ணே இனி ஒருபோதும் பிரிவே இல்லை” என செவிக்கு தேனாக ஒலிக்கும் பவதாரணியின் குரலுக்கும் ரசிகர்களுக்கும் பிரிவே இல்லை என்பதை உணர்த்துகிறது. அதேபோல “மழை பொழிகின்ற இரண்டாம் நாளில் விழும் துளியில் மாசில்லை ; இது ஒருவகையில் இரண்டாம் பிறவி வாழ்வில் இனிமேல் குறையில்லை” என ஒலிக்கும் விஜய்யின் குரல் ஏதோ மயக்கத்தையே ஏற்படுத்துகிறது. இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடுவதுடன், வசீகரா படத்தின் காம்போவை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.

தி கோட் பட பாடல்
0 தோல்வி.. வரிசையாக 6 வெற்றி! இருப்பினும் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் SA! வில்லனாக மாறிய WI!

டைரக்டர் சார் நீங்க தப்பா சொல்லிட்டிங்க!

யுவன்சங்கர் ராஜா இசையில் சின்ன சின்ன கண்கள் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள கோட் படத்தின் பாடல் பவதாரணியின் குரலில் வெளியாவதால், அது எங்களுடைய இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.

G.O.A.T Movie
G.O.A.T Movie

ஆனால் தற்போது ரசிகர்கள் பவதாரணியின் பிரிவிற்கு பிறகு அவருடைய குரலில் ஒலிக்கும் பாடல் “எங்களுடைய இதயத்திற்கும் நெருக்கமான பாடல் தான் சார், நீங்க நமக்குனு சொல்லாம உங்களுக்குனு மட்டும் தப்பா சொல்லிட்டிங்க” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தி கோட் பட பாடல்
’2K + 90ஸ் கிட்ஸ்’ எல்லாரும் காலி.. ‘மாலை டும்டும்’ பாடலுக்கு பின் கலக்கும் ‘கல்யாண கச்சேரி’ பாடல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com