Ilayaraaja
Ilayaraajaமுகநூல்

கோவில் கருவறைக்குள் சென்றபோது வெளியே அனுப்பப்பட்ட இளையராஜா!

ஜீயர்கள் கருவறைக்குள் சென்றபோது, இளையராஜாவும் உள்ளே சென்றார். இதைக் கண்ட ஜீயர்களும் பட்டர்களும் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்குமாறு கூறினர்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்ய பாசுரம் இசைக் கச்சேரியில் பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா, அங்குள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

அங்கு ஆடித் திருப்பூரப் பந்தலில் நடைபெற்ற விழாவில், இளையராஜா இசையமைத்து பாடிய திவ்ய பாசுரம் இசைக் கச்சேரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த இளையராஜா, ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்காக சென்றார்.

Ilayaraaja
வெளியான Good Bad Ugly படத்தின் புது லுக்... ‘கடவுளே அஜித்தே’க்கு NO.. ‘அழகே அஜித்தே’க்கு YES..!

அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர், ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயரும் இதில் பங்கேற்றனர். அப்போது ஜீயர்கள் கருவறைக்குள் சென்றபோது, இளையராஜாவும் உள்ளே சென்றார். இதைக் கண்ட ஜீயர்களும் பட்டர்களும் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்குமாறு கூறினர். அதன் பிறகு கருவறைக்கு வெளியே சென்ற இளையராஜா, அங்கிருந்தபடியே வழிபாடு செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com