\
Vanni Arasu Announces Special Law Against Honor Killings
அமைச்சர் வன்னி அரசுPt web

“தவெக கூட்டணிக்கு பாமக வந்தால் விசிக வெளியேறும்” - அமைச்சர் வன்னிஅரசு

தவெக கூட்டணிக்கு பாமக வந்தால் விசிக வெளியேறும் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு வெளிப்படையாக கூறியுள்ளார்.
Published on: 
Summary

தவெக கூட்டணியில் பாமக இணைந்தால், விசிக வெளியேறும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார். திருமாவளவனின் தலைமையில் நடந்த கூட்டத்தில், சாதி ஒழிப்பு மற்றும் தமிழ்த் தேசியம் குறித்து விசிக உறுதியாக செயல்படும் இயக்கமாக இருப்பதை வலியுறுத்தினார்.

திண்டிவனத்தில் விசிக சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் வன்னியரசு, எம் பி ரவிக்குமார், விசிக மாநில பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

திருமாவளவன்
திருமாவளவன்Pt web

அப்போது மேடையில் பாமக குறித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், மதுராந்தகம் இடைதேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என பாமக தெரிவித்தது. அதனால் எங்களால் தான் தவெக வெற்றி பெற்றதாக தெரிவிக்கிறார்கள். பாஜக, பாமக இருக்கிற கூட்டணியில் விசிக இருக்காது என திரும்ப திரும்ப சொல்லி வருகிறோம். இதனை சொல்லுவதன் மூலம் பாமகவிற்கு நல்லது நடக்கிறது. வன்னியர்கள் பாமக கூட்டணிக்கு வாக்களிக்க ஒன்று சேர்க்க பாமவிற்கு உதவுதாகவும், பாமக 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றபோது ஆதிதிராவிட வாக்குகள் தான் காரணம் என பாமக மருத்துவர் ராமதாஸ் தன்னிடம் கூறினார். நாடக காதல் திருமணங்கள் திருமாவளவனால் தான் நடைபெறுகிறது என பாமக 38 மாவட்டங்களிலும் கூட்டம் போட்டு ராமதாஸ் தெரிவித்தார்.

இந்தசூழலில் மேடையில் பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “சாதியவாத மதவாத பாஜக, பாமகவுடன் கூட்டணி இல்லை. தவெக கூட்டணியில் பாமக வந்தால் விசிக வெளியேறும். எங்களுக்கு அமைச்சர் பதவி முக்கியமில்லை. திருமாவளவன்தான் முக்கியம். பதவி இன்று வரும் நாளை போகும். ஆனால், கட்சிதான் முக்கியம். தமிழ்த் தேசியத்தை வைத்து சிலர் பிழைப்பு வாதம் செய்கிறார்கள். சாதி ஒழிப்புதான் தமிழ்த் தேசியம் தமிழ்த் தேசியம்தான் உயிர் மூச்சு என முழங்கும் விசிக, விடுதலைக்காக இயங்கும் இயக்கம்” என பேசினார்.

Vanni Arasu Announces Special Law Against Honor Killings
'சீமான் தவிர ஒருவனுக்கு கூட எந்த அறிவும் இல்லை..' நாதகவை விமர்சித்த திருமாவளவன்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com