\
Thirumavalavan Slams RSS Over Ambedkar Politics
விசிக தலைவர் திருமாவளவன் pt web

'சீமான் தவிர ஒருவனுக்கு கூட எந்த அறிவும் இல்லை..' நாதகவை விமர்சித்த திருமாவளவன்!

நாம் தமிழர் கட்சியில் ஒருவர் இருக்கிறார், அவரைத்தவிர ஒருவனுக்கு கூட எந்தவித அறிவும் இல்லை என திருமாவளவன் பேசியுள்ளார்.
Published on: 
Summary

நாம் தமிழர் கட்சியில் சீமான் தவிர மற்றவர்களுக்கு அறிவு இல்லை என திருமாவளவன் விமர்சித்தார். சாதி, மதவாதிகளால் கட்சி தெலுங்கு எதிர்ப்பை தமிழ்தேசியமாக மாற்றியதாக குற்றம்சாட்டினார். தமிழ்தேசியம் என்பது தனிநாடு வேண்டுமென்ற எண்ணம் என அவர் விளக்கினார்.

திண்டிவனத்தில் விசிக சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் வன்னியரசு, எம் பி ரவிக்குமார், விசிக மாநில பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

அப்போது நாம் தமிழர் கட்சி குறித்து மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “நாம் தமிழர் கட்சியில் சீமான் தவிர மற்றவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. அங்கு சாதியவாதிகளும் மதவாதிகளும் மட்டும் தான் இருக்கிறார்கள். அரசியல் முதிர்ச்சி உள்ளவர்கள், பக்குவம் உள்ளவர்கள் கிடையாது. சீமானுக்கு கெட்டப்பெயரே அந்தக் கும்பலால் தான். 100 சதவீதம் சாதி வெறியர்களும், மத வெறியர்களும் அக்கட்சியை ஆக்கிரமித்துக்கொண்டு அதை தெலுங்குக்கு எதிரான கட்சியாக மாற்றிவைத்துள்ளனர். தெலுங்கு எதிர்ப்பு தான் தமிழ்தேசியம் என்று திரிபுவாதம் செய்கிறார்கள்.

தமிழ்தேசியம் என்றால் நாங்கள் தேசிய இனம், எங்களை நாங்களே ஆண்டுகொள்வோம், எங்களுக்கு தனிநாடு வேண்டும் என்பது. இதுதான் ஈழத்திலும், தமிழரசன் பேசிய தமிழ்தேசியம். தமிழ் தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சி தமிழரசன் குறித்து பேசியிருக்கிறதா.

திருமாவளவன்
திருமாவளவன்pt

தமிழ் தேசியமும் வளரட்டும், மலையாள தேசியமும் வளரட்டும், கன்னடம் பேசும் தேசியமும் வளரட்டும், இந்தி தேசியமும் வளரட்டும் அது இந்தி பேசக்கூடிய இடத்தில் மட்டும் வளரட்டும். 

தெலுங்கர்களால் தமிழ் அழிந்துவருகிறது என ஒரு கூட்டம் கூறுகிறது, தமிழ்நாட்டில் தான் முகமூடி போட்டுக்கொண்டு சாதியவாதிகள் இருக்கிறார்கள். நாளை முதலமைச்சர் ஆக போகிறோமோ என்பது இல்லை முற்போக்கு அரசியலையும் சமூக அரசியலை பாதுகாப்பது தான் நமது நோக்கம்” என தெரிவித்தார். 

Thirumavalavan Slams RSS Over Ambedkar Politics
’2ஆம் இடம் கிடைத்ததற்கே பெருமைப்படும் திமுக..’ திருமாவளவன் விமர்சனம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com