நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்pt desk

பாஜக உடன் கூட்டணி இல்லை|விஜய் எடுக்கும் முடிவுக்கு நான் கருத்து சொல்ல முடியாது -நயினார் நாகேந்திரன்

ஓபிஎஸ் கூட்டணியில் தான் இருக்கிறார் அதில் சந்தேகம் எதுவும் இல்லை. மக்களுக்கு எதிரான இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் எல்லோரும் ஓரணியாக இணைந்தால் எளிதாக இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை சிந்தாமணி பகுதியில், 7 மாவட்ட பாஜக நிர்வாகிகள உடனான ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில்; நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசிய போது....

தமிழகத்தில் மூவர்ணக் கொடியேந்தி பாஜக யாத்திரை நடத்த உள்ளோம். நேற்று திருச்சியில் இன்று திருப்பூரில் யாத்திரை நடத்த உள்ளோம். அதில் நானும் அண்ணாமலையும் பங்கேற்க உள்ளோம். அமலாக்கத்துறை ரெய்டுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நெருப்பு இல்லாமல் புகையாது அதுபோல் அங்கு ஏதாவது இருக்கும்.

நயினார் நாகேந்திரன்
ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு நிம்மதியாக இருக்கிறேன் - அண்ணாமலை

விஜய் பிஜேபியுடன் கூட்டணி இல்லை எனக் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு கட்சியின் தலைவர் கூட்டணி வைப்பதும், வைக்காததும் அவருடைய சொந்த விருப்பம். மக்களுக்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் எல்லோரும் ஓரணியாக இணைந்தால் எளிதாக இருக்கும்.. அந்தக் கட்சி தலைவர் எடுத்திருக்கும் முடிவிற்கு நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது.

TVKVijay
Vijay
TVKVijay Vijay

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. டிடிவி.தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்களா என்பது கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தெரியவரும். நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என தமிழக முதல்வர் சொல்வதற்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால், இதனை தீர்மானிக்க வேண்டியது மக்கள்தான். நமது நாட்டை பாதுகாப்பவர்கள் ராணுவ வீரர்கள் தான் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு போன்றவர்கள் அவர்களை பற்றி குறைசொல்லி பேசக்கூடாது.

நயினார் நாகேந்திரன்
"பயங்கரவாதிகளுக்கு ரூ.14 கோடி நிதி அளித்த பாகிஸ்தான் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

ஓபிஎஸ் எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார். அதில் சந்தேகம் எதுவும் இல்லை. அவர் கூட்டணியில் இருப்பதால் சென்னை வந்த அமித் ஷா ஓபிஎஸை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம். தொடர்ந்து கூட்டணி குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அவசரப்படாதீர்கள் கூடிய விரைவில் தெரியவரும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com