கொரோனாவை வென்று விட்டேன்: வாழ்வாதாரத்தை வெல்ல முடியவில்லை - உதவி நாடும் 103 வயது மூதாட்டி

கொரோனாவை வென்று விட்டேன்: வாழ்வாதாரத்தை வெல்ல முடியவில்லை - உதவி நாடும் 103 வயது மூதாட்டி
கொரோனாவை வென்று விட்டேன்: வாழ்வாதாரத்தை வெல்ல முடியவில்லை - உதவி நாடும் 103 வயது மூதாட்டி

கொரோனாத் தொற்று ஏற்பட்டு குணமடைந்தபோதும், வாழ்வாதாரத்தால் நெருக்கடியைச் சந்தித்துள்ள 103 வயதான மூதாட்டி ஒருவர் உதவிக் கரம் நீட்டும்படி கோரிக்கை வைத்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் வசித்து வருபவர் 103 வயது மூதாட்டி ஹமிதா பீ. இவருக்கு மொத்தம் 12 குழந்தைகள். இதில் 11 குழந்தைகள் இறந்து விட்ட நிலையில் தற்போது அவரது மகள் வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகளின் கணவரும் இறந்து விட்டார். இதனால் மகள் தனியாக, காலணி தொழிற்சாலைக்கு சென்று வாழ்க்கைச் சக்கரத்தை சுற்றி வந்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் மூதாட்டிக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர். தொடர் சிகிச்சையால் மூதாட்டி கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார்.


தனிமைப்படுத்தப்பட்டவர்களும் வீடு திரும்பினர். இதனைத்தொடர்ந்து மறுபடியும் பணிக்குத் திரும்பிய மூதாட்டியின் மகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் இக்குடும்பம் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறது. இந்நிலையில் தங்களுக்கு யாராவது உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com