
தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read Also -> மின்தடையை சாதகமாக்கி இரவில் கொள்ளை
நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான நிறுவனங்களையும் மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இதன்படி தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் மற்றும் காவிரி டெல்டா பகுதியில் இரு இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி ஒஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தம் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிராதன் முன்னிலையில் இன்று மாலை 3 மணியளவில் டெல்லியில் கையெழுத்தாகவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தால், அங்கு நடைபெற்று வந்த பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்தச் சூழலில் தமிழகத்தில் புதிதாக மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.