[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்

எஸ்பிஐ ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறீர்களா. .? இதனை மறக்காமல் படியுங்கள்..!

sbi-debit-card-user-must-read

எஸ்பிஐ வங்கியின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி மாஸ்டர் டெபிட் கார்டு, மேஸ்ட்ரோ டெபிட் கார்டு, கிளாசி டெபிட் கார்டு என பலவகையான டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்பட்சத்தில் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் வழியாக நாம் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் பணமில்லா பரிவர்த்தனைக்கும் டெபிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கியின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அக்டோபர் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் எஸ்பிஐ வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. டெபிட் கார்டுகள் வழியாக தினசரி அதிக பணம் எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் எஸ்பிஐ வங்கியின் உயர்வரம்பு கொண்டு டெபிட் கார்டுகளுக்கு மாறவும் வாடிக்கையாளர்களை எஸ்பிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் பல வகையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பெருநகரங்கள், நகரங்களில் எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூபாய் 3000 வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். இதேபோன்று எஸ்பிஐ ஏடிம் கார்டை பயன்படுத்தி எஸ்பிஐ ஏடிம்களில் மாதத்திற்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். மீறி எடுக்கும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். அதேசமயம் எஸ்பிஐ கார்டை மற்ற வங்கியின் ஏடிஎம்களில் பயன்படுத்தினால் மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க முடியும். இதுபோன்ற கடுமையான அறிவிப்புகளால் எஸ்பிஐ மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் எஸ்பிஐயின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close