வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற கணவர்: மீட்டுத்தரக் கோரி குழந்தைகளுடன் கண்கலங்கி காத்திருக்கும் பெண்!

வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற கணவரை மீட்டுத்தரக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு புகார் மனுவுடன் பெண் காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
women with her child
women with her childpt desk

செய்தியாளர்: நாசர்

சிவகங்கை அருகே கூத்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் மதுபாலா. (28) இவருக்கும், பார்த்திபன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக பார்த்திபன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

Women with her child
Women with her childpt desk
women with her child
“என் மனைவி உணவில் டாய்லெட் கிளீனர்” - குற்றஞ்சாட்டிய இம்ரான் கான்; பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு!

இந்நிலையில், தன்னை பிரம்பால் அடிப்பது போன்ற வீடியோவை வெளிநாட்டில் இருக்கும் கணவர் பார்த்திபன் தனது மனைவி மதுபாலாவிற்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த மதுபாலா, கணவரை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க தனது குழந்தைகளுடன் வந்திருந்தார். ஆனால், ஆட்சியர் இன்று காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்திற்குச் சென்று விட்டதால், மதுபாலா தனது குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலக வாயிலில் காத்திருந்தார்.

கணவனை மீட்டுத்தரக் கோரி பெண் ஒருவர் கைக் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலக வாயிலில் காத்திருந்தது காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com