\
ஆசிட் வீசிய கணவன் ஆறுமுகம்
ஆசிட் வீசிய கணவன் ஆறுமுகம்pt

ஆத்தூர் அருகே கொடூரம்.. குடும்ப தகராறில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்!

ஆத்தூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவி மீது கணவனே ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயங்களோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மனைவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Published on
Summary

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆனைக்கல் மேடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், குடும்ப தகராறில் ஆத்திரம் அடைந்து தனது மனைவி முத்தம்மாளின் மீது ஆசிட் ஊற்றி கொடூரம் செய்துள்ளார். 60 வயதான முத்தம்மாள் படுகாயம் அடைந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆனைக்கல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் அவரது மனைவி முத்தம்மாள் (60). ஆறுமுகம் சேகோ ஆலையில்  கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

ஆசிட் வீசிய கணவன் ஆறுமுகம்
ஆசிட் வீசிய கணவன் ஆறுமுகம்

இந்நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் முத்தம்மாள் மீது ஆசீட் ஊற்றி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த முத்தம்மாள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிட் வீசிய கணவன் ஆறுமுகம்
“நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது” - நிச்சயத்தார்த்தமான பெண்ணின் மீது ஆசிட் வீசிய நபரால் அதிர்ச்சி!
ஆசிட் வீசிய கணவன் ஆறுமுகம்
உ.பி : தண்ணீர் கேட்டவருக்கு ஆசிட் கொடுத்த போலீஸ்... கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com