சாலை பணிக்காக 2221 கோடி ரூபாய்
சாலை பணிக்காக 2221 கோடி ரூபாய்முகநூல்

சாலை பணிக்காக 2221 கோடி ரூபாய்; சீரமைக்காமல் கைவிடப்பட்ட சாலைகள் எத்தனை? மாநகராட்சி சொல்வதென்ன?

சீரமைக்காமல் கைவிடப்பட்ட சாலைகள் குறித்து மாநகராட்சி என்ன சொல்கிறது ?...இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
Published on

செய்தியாளர் வினிஷ் சரவணன்..

சென்னையில் கடந்த 4 ஆண்டுகளில் சாலை பணிக்காக 2 ஆயிரத்து 221 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததில் ஆயிரத்து 692 கோடி ரூபாய்க்கு மட்டுமே பணிகள் நடைபெற்றதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீரமைக்காமல் கைவிடப்பட்ட சாலைகள் குறித்து மாநகராட்சி என்ன சொல்கிறது ?...இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு சாலைகள் மேம்பாட்டு திட்டம், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் சிறப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னையில் புதிய சாலைகள் அமைத்தல், பழைய சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது மாநகராட்சி நிர்வாகம்.

அதன் படி கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 3223 கிலோ மீட்டர் நீளத்திற்கு 18, 895 சாலைகள் சீரமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், அதில் 17 ,569 சாலைகள் மட்டுமே மறு சீரமைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

2021ஆம் ஆண்டு சாலைகள் அமைக்க 215 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதில் 203 கோடி ரூபாயில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், 2022ல் ஒதுக்கீடு செய்த 427 கோடி ரூபாயில் 411 கோடி மட்டுமே செலவாகியுள்ளது. 2023இல் ஒதுக்கீடு செய்த 708 கோடி நிதியில் 657 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

2024இல் ஒதுக்கீடு செய்த 401.6 கோடி ரூபாயில் 349 கோடி ரூபாய் மட்டும் செலவிடப்பட்டுள்ளது. 2025 இல் ஒதுக்கீடு செய்த 468 கோடி நிதியில் தற்போதுவரை 71 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. அதே போல், கடந்த 2021இல் 16சாலைகளும், 2022இல் 85 சாலைகளும், 2023இல் 249சாலைகளும், 2024இல் 75 சாலைகளின் பணிகளும் கைவிடப்பட்டுள்ளன.

சாலை பணிக்காக 2221 கோடி ரூபாய்
”அதிமுக ஆட்சியில் கோவில் நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு இலவச பட்டா” - இபிஎஸ்

திட்டமிட்டிருந்த சாலைகளில் 901 சாலைகளில் தற்போது வரை மறுசீரமைப்பு பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதற்கான காரணத்தை மாநகராட்சியிடம் கேட்டபோது மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 2 ம் கட்ட பணிகளால் சில இடங்களில் சாலைகளை மறுசீரமைப்பு செய்யமுடியாத சூழல் இருப்பதாகவும், கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணிகளை பருவ மழைக்குள் முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com