ராம் மோகன் நாயுடு, ஒசூர் விமான நிலையம்
ராம் மோகன் நாயுடு, ஒசூர் விமான நிலையம்Pt web

ஒசூர் விமான நிலையம் தாமதம் ஏன்?.. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்!

ஒசூர் விமான நிலையத்திற்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, மத்திய விமானத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
Published on
Summary

ஒசூர் விமான நிலையம் தொடர்பான திட்டம் மத்திய அரசால் ஏற்கப்படாததற்கு முக்கிய காரணம், அந்த பகுதியில் தேசிய பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆய்வுகள் நடைபெறுவதால், அவற்றுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே. மேலும், பெங்களூருவில் உள்ள HAL விமான நிலையத்துடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால், சிவில் விமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்க சிக்கல் உள்ளது.

ஓசூர் விமான நிலையம் தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்துள்ளதா? அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏன் என்று திமுக எம்.பி. கல்யாணசுந்தரம் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து, இக்கேள்விக்கு மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

ராம் மோகன் நாயுடு
ராம் மோகன் நாயுடுx

ஒசூர் விமான நிலையம் குறித்து அவர் பேசுகையில், “ஒசூர் பகுதியில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் விண்வெளி சார்ந்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டங்களின் செயல்பாடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்பதால், ஒசூர் விமான நிலையப் பரிந்துரை தற்போது ஏற்கப்படவில்லை. ஒசூரின் வான்வெளி பகுதி பெங்களூருவில் உள்ள HAL விமான நிலையத்தின் செயல்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையது. ராணுவ விமானங்களின் சோதனை ஓட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வான்வெளி பயன்பாடு காரணமாக, சிவில் விமானப் போக்குவரத்துக்கான அனுமதி வழங்குவதில் சிக்கல் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ராம் மோகன் நாயுடு, ஒசூர் விமான நிலையம்
”தமிழ்நாட்டை பண்பாடு மற்றும் பொருளாதார ரீதியில் புறக்கணித்தது ஏன்?” - கனிமொழி சோமு கேள்வி!

மேலும், தமிழக அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கையை மத்திய அரசு விரிவாக ஆய்வு செய்ததாகவும், தற்போதைய சூழலில் பாதுகாப்பு நலன் கருதி இதற்கு அனுமதி வழங்க பரிந்துரைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் ராம் மோகன் நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு ஒசூரில் ஒரு சர்வதேச விமான நிலையத்தை அமைக்க தீவிரமாக முயற்சி செய்து வரும் வேளையில், மத்திய அரசின் இந்த நிலைப்பாடு திட்டத்தின் வேகத்தைக் குறைத்துள்ளது. ஒசூர் ஒரு மின் வாகன உற்பத்தி மையமாக வளர்ந்து வருவதால், அங்கு விமான நிலையம் அவசியம் என்பது மாநில அரசின் வாதம். மேலும், 150 கி.மீ விதிமுறை பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலைய ஒப்பந்தத்தின்படி, குறிப்பிட்ட தூரத்திற்குள் மற்றொரு விமான நிலையம் அமைப்பதில் உள்ள சட்ட சிக்கல்களும் ஒரு தடையாக உள்ளன.

ராம் மோகன் நாயுடு, ஒசூர் விமான நிலையம்
ஒரு சொட்டு நீர் கூட செல்லக்கூடாது.. பட்டினியால் வாடப்போகும் பாகிஸ்தான்.. இந்தியாவின் பிரம்மாஸ்திரம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com