முதியோருக்காக கட்டிக்கொடுக்கப்படும் வீடுகள், சிறைச்சாலைகள் போல் உள்ளதா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!
முதியோருக்காக தனியார் நிறுவனங்களால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள், சிறைச்சாலைகள் போல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓடோடி உழைத்து சோர்ந்தவர்கள் ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ தனி இல்லங்களை நாடுகின்றனர். இதற்காக தனியார் நிறுவனங்கள் சார்பில் கட்டிக்கொடுக்கப்படும் வில்லா வீடுகளை வாங்குகின்றனர். பல லட்சம் ரூபாய் முதலீட்டில் வீடுகளை வாங்கும் முதியவர்கள், உறுதியளிக்கப்பட்டபடி அனைத்து வசதிகளும் கிடைக்கும் என நம்புகின்றனர்.
ஆனால் இந்த வீடுகளில் தினசரி வாழ்க்கையில் முதியவர்கள் சந்திக்கும் விஷயங்கள் குறித்து சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோவை நுகர்வோர் அமைப்பு சார்பில் கோவையில் ஆலோசிக்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து முதியவர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். மருத்துவம், சட்டம் சார்ந்த பிரச்சனைகளில் சட்டத்தை அரசு முறையாக அமல்படுத்த வேண்டும் என முதியவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக முதியோர்கள் எழுப்பிய புகார்கள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.