மழை பாதிப்பு: செங்கல்பட்டில் 6, காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு 6 தாலுகாக்கள், காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்கள் என மொத்தம் 8 தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறைpt web

தெற்கு அந்தமான் வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அது நவம்பர் 28ஆம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது.

chennai rain
chennai rainpt desk

நவம்பர் 30ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. டிசம்பர் 3ஆம் தேதி புயலாக வலுவடைந்த நிலையில், அதற்கு மிக்ஜாம் என பெயர் வைக்கப்பட்டது. புயல் உருவானதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள், ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. டிசம்பர் 4ஆம் தேதி புயலின் தீவிரம் காரணமாக விடாது பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்கடாக மாறின. நேற்று சென்னையில் மழையின் அளவு குறைந்த போதும் முதல் நாள் பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் நீர் குளம் போல் காட்சி அளித்தது. தொடர்ந்து தமிழகத்தில் மீட்புப் பணிகள் நடந்த வண்ணம் உள்ளன. இத்தகைய சூழலில் புயல் சென்னையை விட்டு விலகி தெற்கு ஆந்திரத்தின் பாபட்லா அருகே 100 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்துள்ளது.

தீவிர மழைக்கு பின் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீட்புப் பணிகள் நடந்த வண்ணம் உள்ளன. அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை டிசம்பர் 7 ஆம் தேதி 6 தாலுக்காக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் தாலுகாவில் வழக்கம்போல் நாளை கல்வி நிறுவனங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com