தமிழ்நாட்டு இனக் காளைகளில் பெயர் பெற்ற கம்பீரமான ’காங்கேயம் காளை’.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?

தமிழ்நாட்டு இனக் காளைகளில் மிகவும் புகழ் பெற்றது காங்கேயம் இனக் காளைகள்தான்.அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
காங்கேயம்
காங்கேயம்புதிய தலைமுறை

தமிழ்நாட்டு இனக் காளைகளில் மிகவும் புகழ் பெற்றது காங்கேயம் இனக் காளைகள்தான். அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், தாராபுரம், ஈரோடு, கரூர், நாமக்கல்பகுதிகளில் விவசாயப் பணிகளுக்காக வளர்க்கப்படும் நாட்டு இனத்தைச் சேர்ந்தவை காங்கேயம் காளைகள். வறண்ட பகுதிகளிலும் வாழும் தன்மை கொண்ட காங்கேயம் காளைகள், இயல்பாகவே அதீத எடையுள்ள வண்டியை இழுக்கும் திறன் கொண்டவை. 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிலோ எடையிலான வண்டியை கூட அவை இழுக்கும் எனக் கூறுகிறார்கள் மாடு வளர்ப்போர்.

கடுமையான கால நிலையில் கூட, உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப வாழும் தன்மை கொண்டது. காங்கேயம் காளைகளில் பொதுவாக 4 வகைகள் உண்டு. அதில் முதலாவது மயிலை, வெள்ளி நிறத்தில் இருக்கும். இரண்டாவது பிள்ளை, வெண்மை நிறத்தில் இருக்கும். மூன்றாவதாக செவலை, சிவப்பு நிறத்திலும், நான்காவதாக காரி, கருப்பு நிறத்திலும் இருக்கும்.

காங்கேயம்
சென்னை: மதுபோதையில் அணைக்காமல் போட்ட சிகரெட் துண்டால் பறிபோன உயிர்!

மிடுக்கான தோற்றத்துடன், அதீத உழைப்பை இவை அளிக்கின்றன. இது மட்டுமல்ல, சிந்து சமவெளியில் கிடைத்த காளை முத்திரையில், காங்கேயம் காளையின் தோற்றம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மீண்டும் இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில மக்களும், காங்கேயம் காளைகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com