உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, குழந்தை தத்தெட்டுப்பு (மாதிரிப்படம்)
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, குழந்தை தத்தெட்டுப்பு (மாதிரிப்படம்)pt web

”இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்” - நீதிமன்றம் கொடுத்த முக்கிய உத்தரவு

மதுரையைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்கள் குழந்தை தத்தெடுப்பை அங்கீகரிக்காத போதிலும் அந்த மதங்களைச் சேர்ந்தவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கூறியிருக்கிறது.
Published on
Summary

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்கள் குழந்தை தத்தெடுப்பை அங்கீகரிக்காத போதிலும் அந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணமாகி குழந்தையில்லை. அவரது சகோதரருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது சகோதரர் சமீபத்தில் உயிரழந்துள்ளார். இந்நிலையில், சகோதரரின் 8 வயது மகனை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். இதற்கு, மகனை தத்து கொடுக்க சகோதரரின் மனைவியும் ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து, தத்தெடுப்பு பத்திரம் பதிவுக்காக மேலூர் கிழக்கு சார்பு பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால், அந்த விண்ணப்பத்தை இஸ்லாம் மதம் தத்தெடுப்பை அனுமதிக்கவில்லை எனக் கூறி சார்பதிவாளர் நிராகரித்திருக்கிறார். இந்நிலையில், அதை ரத்துசெய்து தனது தத்தெடுப்பை பதிவுசெய்ய உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றமதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளைpt web

இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது "இஸ்லாம் மதம் குழந்தை தத்தெடுப்பை அங்கீகரிக்கவில்லை என்பது உண்மை தான். அதே நேரத்தில் சிறார் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்றும்பாதுகாப்பு)சட்டம்- 2000, அந்த சட்டத்தின் 2015ம் ஆண்டின் அவதாரமும் மதபின்னணியில் அடிப்படையில் விருப்பமுள்ள பெற்றோர்கள் குழந்தைகளைதத் தெடுக்க வழி வகை செய்கிறது. சிறார் நீதிச் சட்டம்குழந்தைகளை தத்தெடுக்க உதவுகிறது. கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் தத்தெடுப்பை அங்கீகரிக்காவிட்டாலும்அந்தமதத்தினர் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம். இந்துக்களின் தத்தெடுப்பு முற்றிலும் வேறுபட்டது. இந்து மதத்தில் தத்தெடுப்பு வெளிப்படையாக அனுமதிக்கிறது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, குழந்தை தத்தெட்டுப்பு (மாதிரிப்படம்)
தமிழகத்தில் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

இந்த தத்தெடுப்பு இந்து தத்தெடுப்புகள் மற்றும் பராமரிப்பு சட்டம்- 1956 சட்ட விதிகளுக்கு உட்பட்டது. இந்த வழக்கில் குழந்தையை தத்துகொடுப்பவரும், தத்து எடுப்பவர்களும் இஸ்லாமியர்கள். இவர்கள் குழந்தை தத்தெடுப்புக்கு சிறார் நீதி சட்டம் 2015-ல் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்காக தத்தெடுப்புபத்திரத்தை பதிவு செய்ய எளிமையான வழிகளை நாடமுடியாது. இதை சட்டம் அங்கீகரிக்கவும் இல்லை. குழந்தை தத்தெடுப்பு என்பது அந்த குழந்தையின் உண்மையான பெற்றோர்களின் சம்மதத்துடன் அனுமதி வழங்குவதில் நீண்ட தாமதம் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன.

adoption
adoptionஎக்ஸ்

சமீபத்தில் தி இந்து ஆங்கில நாளிதழிலில், இந்தியா அதன் தத்தெடுப்பு நடைமுறைகளை தளர்த்தவேண்டுமா?" என்ற தலைப்பில் ஒருதலையங்கம் எழுதப்பட்டிருந்ததை பார்த்தேன். அதில் குழந்தைகள் தத்தெடுப்பில் உள்ள தாமதம் குறித்து விரிவாக கூறப்பட்டிருந்தது. குழந்தை பிறக்கும் போதோ அல்லது குழந்தை பருவத்தின் பிற்பகுதியிலோ தத்துகொடுப்பது என்பது ஒரு நிரந்தரமான மற்றும் வளர்ந்த குடும்பத்தைஉருவாக்கும். இதில் சம்பந்தப்பட்ட குழந்தையின்உடல், உணர்ச்சி, உறவு மற்றும் கல்வித்தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.பல சந்தர்ப்பங்களில் தத்தெடுப்பானது சம்பந்தப்பட்ட குழந்தை தத்தெடுப்புக்கு முன்பு சந்தித்த பாதகமான மற்றும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகளிலிருந்து மீளவாய்ப்பு அளிக்கிறது. தத்தெடுப்பு ஒரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கைமுறை மற்றும் தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வாய்ப்புகளை வழங்குகிறது. எனவே தத்தெடுப்பு நடைமுறைகளை தாமதப்படுத்தும் போது குழந்தைகளின் வாழ்க்கைப்பாதையில் கணிசமான மாற்றத்துக்கான அனுபவங்கள், வாய்ப்புகளை தாமதப்படுத்துகிறது. எனவே தத்தெடுப்பு நடைமுறைகளை சிறார்நீதிச் சட்டத்தின் அடிப்படையில்அதிகாரிகள்விரைவுபடுத்த வேண்டும்" எனஉத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, குழந்தை தத்தெட்டுப்பு (மாதிரிப்படம்)
WC அரையிறுதி| கடைசி இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் போட்டி.. யாருக்கு அதிக வாய்ப்பு?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com