கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழப்பு
கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழப்புweb

கரூர் துயரம் | உயர்நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை.. விஜய்க்கு தலைமைப்பண்பு இல்லையென சாடல்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

tn cm adviced on karur stampede incidents
தவெக கரூர் பரப்புரைஎக்ஸ்

மறுபக்கம், இந்த விவகாரத்தில், தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றம் மதுரை கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழப்பு
’என்ன மாதிரியான கட்சி இது? தலைவரின் மனநிலையை காட்டுகிறது’ - தவெகவை விளாசிய உயர்நீதிமன்றம்

மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு..

கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும், அதுவரை கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் பேரணி செல்ல அனுமதி வழங்கப்படாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து நீதிபதி செந்தில்குமார், இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

பின்னர், வீடியோக்களை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், காவல் துறை கண்மூடிக் கொண்டிருக்க முடியாது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் சம்பவ இடம் சென்றுள்ளனர் எனத் தெரிவித்த நீதிபதி, நடிகர் விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன, ஆனால் பேருந்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? வழக்குப்பதிய என்ன தடை என கேள்வி எழுப்பினார்.

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழப்பு
தல வழியில் தளபதி.. தோனி வரிசையில் ஜடேஜா செய்த சம்பவம்!

காவல் துறை தனது கைகளை கழுவி விட்டதா? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ? பேருந்து மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி உங்களை நம்புவார்கள் எனக் கேள்வி எழுப்பினார். மேலும் வழக்குப்பதிவு செய்து, பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றார்.

கரூரில் நடந்த சம்பவம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. நீதிமன்றம் இதை கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பொறுப்பை தட்டி கழிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

பின்னர், பெண்கள், குழந்தைகள் பலியான நிலையில், கட்சி தொண்டர்களை, ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு ஓடிய, த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தலைமைப் பண்பு இல்லை. சம்பவத்துக்கு பொறுப்பேற்கவும் இல்லை என கண்டனம் தெரிவித்த நீதிபதி, சம்பவம் நடந்து ஒரு வார காலமானதைச் சுட்டிக்காட்டி, வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டார்.

வழக்கு தொடரான ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலனாய்வு குழு வசம் ஒப்படைக்க, கரூர் போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழப்பு
மாவட்ட செயலாளர்களுடன் பேசிய விஜய்.. “புதிய வேகத்துடன் செயல்படுங்கள்” என நம்பிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com