வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள்... சென்னையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல்!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் செல்லும் வாகனங்களின் வருகை அதிகரிப்பு காரணமாக வானகரம் சுங்கச் சாவடியில் நேற்று இரவு முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Chennai Traffic
Chennai Trafficpt desk

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

தமிழ்நாட்டில் இன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் வாக்களிக்க தங்களது சொந்த ஊர்களுக்குச் நேற்றிரவு முதல் வாகனங்களில் புறப்பட்டனர். இதனால் வானகரம் சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Heavy Traffic
Heavy Trafficpt desk

இந்நிலையில், பயணிகளை ஏற்றிச் செல்ல ஏராளமான தனியார் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மதுரவாயல் தாம்பரம் புறவழிச் சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிக அளவிலான வாகனங்கள் வருகையால் வானகரம் சுங்கச்சாவடி முதல் மதுரவாயில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Chennai Traffic
முதல்நபராக ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அஜித்குமார்!

இதனால், தாம்பரம் சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதேபோல் போரூர் மவுண்ட் சாலையிலும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com