முதல்நபராக ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அஜித்குமார்!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதல்நபராக தனது வாக்கினை செலுத்தியுள்ளார் நடிகர் அஜித்குமார்.
நடிகர் அஜித் குமார்
நடிகர் அஜித் குமார்முகநூல்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உட்பட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தமாக 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.

இதில் முதல் முறை வாக்காளர்கள் 10 லட்சத்து 92 ஆயிரம் பேரும், ஆண் வாக்காளர்களில் 3 கோடியே 6 லட்சம் பேரும், பெண் வாக்காளர்களில் 3 கோடியே 17 லட்சம் பேரும், மாற்றுப் பாலினத்தவர்களில் 8 ஆயிரத்து 467 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்குரிமை
வாக்குரிமைமுகநூல்

இந்நிலையில், முதல் நபராக வாக்களிப்பதற்காகவே, தென் சென்னைக்கு உட்பட்ட திருவான்மையூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் அஜித் குமார் காலை 6.45 மணி அளவில் வந்தடைந்திருந்தார்.

நடிகர் அஜித் குமார்
சென்னையில் மொத்தமாக 775 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?

காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதல்நபராக தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார் நடிகர் அஜித்குமார். அந்தக் காட்சிகளை, இங்கே காணலாம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com