நான்கடுக்கு பாதுகாப்பு
நான்கடுக்கு பாதுகாப்புமுகநூல்

வாக்கு எண்ணும் மையத்திற்கு நான்கடுக்கு பாதுகாப்பு

சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 69.46 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் யாவும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சென்னையை பொறுத்தவரை தென் சென்னை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல வடசென்னை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் லயோலா கல்லூரியிலும பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இங்கெல்லாம் காவல்துறை பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் இப்பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான்கடுக்கு பாதுகாப்பு
மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு To நாகலாந்தில் புறக்கணிப்பு - இந்திய அளவில் வாக்குப்பதிவு எப்படி?

மேலும் கேமராக்கள் பொருத்தபட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com