தொடர் மழை
தொடர் மழைமுகநூல்

தொடர் மழை... 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! எங்கெல்லாம் பள்ளி விடுமுறை?

தொடர் மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 தாலுக்காக்களில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது.

தொடர் மழை
'9 கி.மீ தூரம், 4 மணி நேரம்' இறந்தவரின் உடலை டோலி கட்டி சுமந்து சென்ற அவலம்- மலைக்கிராம சோகம்!

அதன்படி வடகிழக்கு பருவமழையின் தொடர்மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாக்களில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (24.11.2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். நீலகிரியை பொறுத்தவரை மழையின் அளவு 3.செ.மீ என்று பதிவாகியுள்ளது.

தொடர் மழை
மழை நேரத்தில் செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை! #VisualStory

மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் “தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னை, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு” என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் எதற்கும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. நெல்லையில் மட்டும், ‘பள்ளி விடுமுறை குறித்து தலைமையாசிரியர்களே முடிவெடுக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com