மழை நேரத்தில் செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை! #VisualStory

Justindurai S

மின் சாதனங்களை தொடக்கூடாது!

மழைக்காலங்களில் மின் விபத்துக்கள் அதிகம் ஏற்படலாம் என்பதால் டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள் மற்றும் மின்சாதன பொருட்களை தொடுவதையோ அருகில் செல்வதையோ தவிர்க்கவும்.

மின்சார பிரச்னைகளை நீங்களா சரிசெய்யாதீங்க!

உங்கள் பகுதிகளில் ஏதேனும் மின் குளறுபடிகள் இருந்தால், மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து சரிசெய்யவும். நீங்களாகவே சரி செய்ய முயற்சிக்கக் கூடாது

மழைக்கிடையே மொபைல்... நோ!

மழை நேரங்களில் மரத்திற்கு அடியில் நிற்பது, மொட்டை மாடியில் இடி மின்னலின் போது கணினி செல்போன் ஆகியவற்றை பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்கவும்.

நீர்க்கசிவுக்கு முன்னெச்சரிக்கை வேண்டும்!

வீட்டுச் சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால், இடிந்து விழுவதற்கோ மின்சாரம் தாக்குவதற்கோ வாய்ப்புள்ளது. ஆகவே நீர்க்கசிவுக்கு உரிய முன்னெச்சரிக்கை எடுக்கவும்.

உணவில் கவனம்

மழைநேரத்தில் சளித்தொல்லை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க குளிர்ச்சியளிக்கும் உணவுகளை தவிர்க்கவும்

Cool Water-க்கு No சொல்லுங்க!

முடிந்த அளவு வெந்நீர் பயன்படுத்தவும்; குளிர்சாதன பெட்டியில் வைத்த குடிநீர் பயன்படுத்தவேண்டாம்

எப்பவும் எதுக்கும் அலெர்ட்டா இருங்க!

எப்போதும் குடை, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, டார்ச் லைட் மற்றும் பேட்டரிகளை தயாராக வைத்திருக்கவும்.

Documents பத்திரம்!

விலை உயர்ந்த பொருட்கள், ஆவணங்கள், உணவுப் பொருட்களை நீர் புகாத பைகளில் பாதுகாத்து வைக்கவும். இதேபோல் அடையாள அட்டை, சான்றிதழ்கள், உள்ளிட்டவற்றையும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

தயார் நிலையில் செல்ஃபோன்...

செல்ஃபோன்களை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைக்கவும்.

சுரங்கப்பாதை வேண்டாம்!

வாகன ஓட்டிகள், சுரங்கப் பாதையில் தண்ணீர் இருந்தால் கடக்க முயலக்கூடாது. வழியில் பள்ளமோ, குழியோ இருந்தால் அது தெரியாமல் போகக்கூடும் என்பதால், மிக மிக கவனம் தேவை