டிரம்ப், விஜய்
டிரம்ப், விஜய்Pt web

HEADLINES | டிரம்ப் அரசின் மீதான ஐ.நா குற்றச்சாட்டு முதல் ’ஜனநாயகன்’ சென்சார் பிரச்னை வரை.!

புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்தியானது, டிரம்ப் அரசின் மீதான ஐ.நா குற்றச்சாட்டு முதல் ’ஜனநாயகன்’ சென்சார் பிரச்னை வரை விவரிக்கிறது.
Published on

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் கணிப்பு... தமிழகத்தில் வரும் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை...

ஜனவரி 9ஆம் தேதி, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

ஜனவரி 10ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்... சென்னை உட்பட 12 மாவட்டங்களில் கனமழை..

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்.... முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு...

முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமிweb

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக ஆளுநரை சந்தித்து எடப்பாடி கே. பழனிசாமி மனு... ஊழலை விசாரிக்க ஆணையம் அமைத்திடவும் வலியுறுத்தல்...

எடப்பாடி பழனிசாமி மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருக்கும்போது மற்றவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தலாமா?.... தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சனம்...

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு... அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்படக்கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து...

ஒருவரின் கோரிக்கைக்காக, இல்லாத வழக்கத்தை நடைமுறைப்படுத்த முடியாது.... திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்....

புதிது புதிதாக அரசியலுக்கு வரும் அட்டை காற்றடித்தால் பறந்துவிடும்... திமுக விழாவில் விஜய்யை மீண்டும் விமர்சித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்... டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு...

விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரிய வழக்கு... படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை இன்று மீண்டும் விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்...

ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தருவதில் சிக்கல் ஏன் என சீமான் கேள்வி... தெலுங்கு பதிப்பில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இல்லை என்றும் பேட்டி...

vijay jana nayagan movie release date announced
ஜனநாயகன்x page

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ரோடு ஷோ நடத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... ரோடு ஷோக்களை 3 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டுமென அறிவுறுத்தல்...

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் 9ஆம் தேதி தொடங்குகிறது... வேட்பாளராவதற்காக யாரையும் நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இராப்பத்து 8ஆம் நாள் விழா கோலாகலம்... வேடுபறி உற்சவத்தில் எழுந்தருளிய பெருமாளை தரிசித்து பக்தர்கள் உற்சாகம்...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்... சென்னையில் இருந்து மட்டும் 22 ஆயிரத்து 797 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு...

ரயில் ஒன் செயலியை பயன்படுத்தி முன்பதிவில்லா டிக்கெட்களை வாங்கினால் 3 விழுக்காடு கட்டணச் சலுகை... வரும் 14 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் வரை அமலில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு...

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 2ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை... வெள்ளி விலை கிலோவுக்கு 5ஆயிரம் ரூபாய் உயர்வு...

வெனிசுலாவின் நிலை இந்தியாவிற்கும் ஏற்படலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப்ரித்விராஜ் சாவன் கருத்து... காங்கிரஸ் தலைவர்கள் ஆன்டி இந்தியன் மனநிலையில் இருப்பவர்கள் என பாஜக பதிலடி...

அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் pt web

ஐநா பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்தில் வெனிசுலா, அமெரிக்கா மோதல் தொடர்பாக முக்கிய ஆலோசனை... ட்ரம்ப் அரசு சர்வதேச விதிகளை மதிக்கவில்லை என ஐநா பொதுச் செயலர் குட்டரஸ் குற்றச்சாட்டு...

வெனிசுலாவை தொடர்ந்து கீரின்லாந்தை கைப்பற்றப் போவதாக டொனால்டு ட்ரம்ப் பேச்சு... அமெரிக்காவின் கருத்துக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூட்டாக கண்டனம்...

ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் மேலும் ஒரு சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்... 13 சதம் அடித்து, அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 2ஆவது இடம்பிடித்து அசத்தல்...

டிரம்ப், விஜய்
'எங்களுக்கு அச்சமாக உள்ளது..' தர்கா, பள்ளிவாசல்களை பாதுகாக்க வேண்டும்.. முதல்வருக்கு கோரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com