HEADLINES | காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் to இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்பு...
காவிரிப் படுகை மாவட்டங்களில் 9, 10ஆம் தேதிகளில் கனமழை என வானிலை ஆய்வு மையம் கணிப்பு... வட தமிழக மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை...
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்... உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தகவல்...
கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி.... உலகம் உங்கள் கையில் திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்...
விலையில்லா மடிக்கணினியை படங்களை பார்க்க மட்டும் பயன்படுத்த வேண்டாம் என மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை...
விலையில்லா மடிக்கணினி திட்டம் மாணவர்களின் வாழ்க்கையில் GAME CHANGERஆக இருக்கும்... வளர்ச்சி, முன்னேற்றம் என தமிழ்நாட்டை உயர்த்திய மாடலே திராவிட மாடல் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்...
கல்விதான் ஒரு தலைமுறையையே வளர்த்தெடுக்கும் என அரசு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு... கல்வியை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள் என மாணவர்களுக்கு நடிகர் கார்த்தி அறிவுரை...
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு... தேர்தல் தோல்வி பயத்தில் லேப்-டாப் திட்டத்தை திமுக செயல்படுத்தியுள்ளதாகவும் விமர்சனம்...
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 2ஆவது நாளாக சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி... தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசித்ததாக தகவல்...
ஆட்சியில் பங்களிக்கும் கட்சியுடன் கூட்டணி என டிடிவி தினகரன் திட்டவட்டம்... சுயமரியாதை இழந்து வேறு எங்கும் செல்ல மாட்டோம் என்றும் பேச்சு...
2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என மாவட்டச் செயலர்களிடம் தேமுதிக தலைமை ரகசிய வாக்கெடுப்பு... தமிழக அரசியலில் எந்த நேரத்திலும் மாற்றம் நிகழலாம் என பிரேமலதா விஜயகாந்த் கருத்து...
அதிகாரம் மட்டும் அல்ல; அதிகாரப் பகிர்வு பற்றியும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்துக்கு.. ஆர்எஸ்எஸ் குரலை மாணிக்கம் தாகூரின் கருத்து எதிரொலிப்பதாக திமுக முன்னாள் எம்.பி. அப்துல்லா விமர்சனம்...
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை நெஞ்சுக்கு நேராக எதிர்ப்பவன் காங்கிரஸ் காரன்... திமுக முன்னாள் எம்.பி. எம்.எம். அப்துல்லா விமர்சனத்திற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதில்...
நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாலேயே புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது... ஈரோடு நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் விளக்கம்...
சென்னையில் கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் கைது... தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு, பணி நியமன கோரிக்கையை வலியுறுத்தி தொடரும் போராட்டம்...
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சென்னையில் இன்று முதல் அமல்... காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப கொடுத்தால் 10 ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு...
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஆயிரத்து 280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 80 ரூபாயாக நிர்ணயம்... வெள்ளி விலை கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து 266 ரூபாய்க்கு விற்பனை...
மத்திய பிரதேசத்தை தொடர்ந்து குஜராத், கர்நாடகாவிலும் மாசடைந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டதாக புகார்... காந்தி நகரில் 100க்கும் மேற்பட்டோருக்கு டைபாய்டு நோய் பாதிப்பிற்கு அசுத்தமான குடிநீரே காரணம் என மக்கள் குற்றச்சாட்டு...
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டுமென ட்ரம்ப் மீண்டும் கரார்... ஒத்துழைக்காவிட்டால் இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்தப்போவதாகவும் எச்சரிக்கை...
இன்னும் வெனிசுலாவின் அதிபர் நான் தான் என நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க நீதிமன்றத்தில் வாதம்... எந்த தவறும் செய்யவில்லை, குற்றமற்றவன் என்றும் திட்டவட்டம்...
வெனிசுலா முன்னாள் அதிபர் மதுரோவின் வாதங்களை நிராகரித்தது அமெரிக்க நீதிமன்றம்... மீண்டும் மார்ச் 17இல் நேரில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவு...
ஈரானில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தீவிரம்... இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்...
ஐபிஎல் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்புக்குத் தடை விதித்தது வங்கதேச அரசு... கொல்கத்தா அணியிலிருந்து முஸ்தபிஸுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை...
முடிவுக்கு வந்தது, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கான தணிக்கை சான்று பிரச்சினை.... யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதால், இன்று முதல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்...

